அதிமுக தலைமைக் கழகம் சார்பில் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்து

இன்று உழைப்பாளர் தினத்தையொட்டி, அதிமுக தலைமைக் கழகம் சார்பில் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உழைப்பின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் மே தினத் திருநாளில், தொழிலாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு உலகளாவிய அளவில் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், நாடுகளின் எல்லைகளை கடந்து உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் உரித்தான நாளாக, கொண்டாடப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உழைக்கும் கைகளே உலகை உருவாக்கும் கைகள் என உலகம் உணர்ந்த இந்தத் திருநாளில், தங்களது தளராத உழைப்பால் தமிழகத்தை உயர்த்தி வரும் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

Exit mobile version