"சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கும்" – வானிலை ஆய்வு மையம்

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, திருச்சி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

13 மாவட்டங்களிலும் வெப்ப நிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பச்சலனத்தால், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலையும் நிலவும் என கூறப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்சம் 40 செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகலாம் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தற்போதைய வானிலை கணிப்புகளின்படி, தென்மேற்கு பருவக்காற்று ஜூன் 1-ஆம் தேதி முதல் வலுவடையும் என எதிர்பாக்கப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளப் பகுதிகளில் வருகிற ஜூன் 3ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Exit mobile version