கர்நாடகாவில் உச்சபட்ச அரசியல் குழப்பம்

எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில், நடவடிக்கை எடுக்கும்படி உச்சநீதிமன்றம் தனக்கு அறிவுறுத்தமுடியாது என கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் கடந்தாண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியும், காங்கிரஸும் இணைந்து 119 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் குமாரசாமி ஆட்சி அமைத்தார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள், சுயேட்சை எம்.எல்.ஏக்கள் 2 பேர் என மொத்தம் 18 எம்.எல்.ஏக்கள் குமாரசாமி அரசுக்குதந்த ஆதரவை திரும்ப பெற்றனர். இதனிடையே கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை இதுவரை ஏற்கவில்லை. எனவே, இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து

10 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் ராஜினாமா குறித்து முடிவு எடுக்கக்கோரி வழக்குதொடர்ந்தனர். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் , இதுதொடர்பாக சபாநாயகர் விரைந்து முடிவை அறிவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இதனிடையே எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவில் நடவடிக்கை எடுக்கும்படி உச்சநீதிமன்றம் தனக்கு அறிவுறுத்தமுடியாது என கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளார்..

Exit mobile version