முதுகலை ஆசிரியர் பணியிடம் நிரப்புவதற்கு கலந்தாய்வு இரண்டாம் நாளாக இன்று நடைபெறுகிறது

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 150 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு இரண்டாம் நாளாக இன்று நடைபெறுகிறது.

அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை 1 லட்சத்து 46 ஆயிரம் பேர் எழுதியிருந்தனர். இதில், தரவரிசைப்படி முன்னிலையில் இருந்த 3 ஆயிரத்து 833 பேருக்கு நவம்பர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இதனையடுத்து, அவர்களுக்கான இட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு பிப்ரவரி 9,10 தேதிகளில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதல் நாளில், தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், அரசியல் அறிவியல், மனையியல் மற்றும் உடற்கல்வி இயக்குனர் ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்ட நிலையில், இரண்டாம் நாளான இன்று கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், உயிர்வேதியியல் ஆகிய பாடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

Exit mobile version