இந்திய வாடிக்கையாளர்களின் சுய விவரங்களை சர்வதேச சர்வர்களில் இருந்து நீக்க மாஸ்டர் கார்டு நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்தியாவில் மாஸ்டர் கார்டு, விசா உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் டெபிட் மற்றும் க்ரெடிட் கார்டுகளை வழங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள், இந்திய வாடிக்கையாளர்களின் சுய விவரங்களை சர்வதேச சர்வர்களில் இருந்து நீக்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. மேலும் இந்திய வாடிக்கையாளர்களின் விவரங்களை இந்தியாவில் தான் சேமிக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்து இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்ட இந்த விதி கடந்த அக்டோபர் 16 ம்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து மாஸ்டர் கார்டு நிறுவனம் தனது இந்திய வாடிக்கையாளர்களின் விவரங்களை அழிக்க ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் இந்த பணி மிகவும் கடினமானது எனவும் இதனால் இந்திய வாடிக்கையாளர்களின் கார்டுகள் பாதுகாப்பு அம்சம் குறையும் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.