பைக் என்றாலே இளைஞர்கள் மத்தியில் நல்ல ஆர்வம் உண்டு. அந்த காலத்தில் பைக் வாங்குவது கடினமான ஒன்று அதையும் தண்டி பைக் வாங்குபவர்கள் பைக் எவளோ மைலேஜ் தருகிறது அதன் விலை பைக்கில் 2பேர் தாராளமாக அமர்ந்து செல்ல முடியுமா என்றெல்லாம் யோசித்து பைக் வாங்குவார்கள் இப்போது இளைஞர்கள் பைக்கின் வேகம் அதன் தோற்றத்தை கொண்டு பைக் வாங்குகிறார்கள் மைலேஜ் தரவில்லை என்றாலும் இளைஞர்கள் மனதை கொள்ளைகொண்ட டாப் ஐந்து பைக்
#Royal Enfield
ராயல் என்பில்ட் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் கவரப்பட்ட பைக். இதில் 350cc முதல் 500cc வரை திறன்கொண்ட பைக்குகள் உள்ளது. அதற்கு அதிகமாக cc கொண்ட பைக் விரைவில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.இதன் எடை 192kg இருந்து தொடங்குகிறது பைக் மாடல் பொறுத்து எடை மாறுபடும் இந்த பைக் பத்தி தெரியாதவங்க யாரும் இருக்கமாட்டாங்க இதன் மைலேஜி 25km முதல் 30km வரை செல்லும் இருந்தாலும் ரோட்டில் நாம் கண்ணுக்கு தெரியும் பைக்கில் இந்த பைக்தா அதிகமா இருக்கும்.இத பார்த்தலே தெரியும் இளைஞர்களுக்கு இந்த பைக் எவளோ புடிக்கும்னு
#Pulsar NS200
பஜாஜ் நிறுவனத்தின் ஒரு படைப்பு pulsar NS200. இந்த பைக் பிடிக்காத இளைஞர்கள் இல்லை. இது 200cc திறன் கொண்ட பைக் ஆகும். இது 3 ஸ்பார்க் பிளக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த எடை 152 கிலோ. பஜாஜ் நிறுவனமோ இந்த பைக் 1liter- க்கு 40km மைலேஜ் தருமென கூறியுள்ளனர். ஆனால் பைக் பயன்பாட்டாளர்கள் 30km முதல் 35km வரை தருகிறது என்று கூறுகின்றனர். இருந்தாலும் இளைஞர்கள் மத்தியில் இந்த பைக் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது
#KTM Duke
பெங்களூர் டேஸ் படத்தில் ஆர்யா duke பைக்கில் வலம் வர, அப்போது இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது இந்த பைக் . ktm இந்த நிறுவனத்தின் பெயரை கேட்டாலே இளைஞர்கள் ஒருமுறையாவது இந்த பைக் ஓட்டவேண்டும் என்ற எண்ணம் தோன்றும். மேலும் இதை ஓட்டினால் தான் சமூகத்தில் பைக் ரேசர் என்று பெயரெடுக்கலாம் என்னும் வகையில் இந்த பைக் இளைஞர்களை அதிகம் ஈர்த்துள்ளது. இது 125cc சிங்கிள் சிலிண்டர் பைக். குறைந்த ccபைக்கில் அதிக பவரை குடுக்கும் பைக் duke. இதன் மொத்த எடை 137kg கொண்டுள்ளது. 35km மைலேஜ் கொடுக்கிறது இருந்தாலும் இந்த பைக் வேண்டாம் சொல்லும் ஒரு இளைஞர்கள் கூட இல்லை என்பதே உண்மை.
#Apache RTR 200 4v
டிவிஎஸ் நிறுவனத்தின் ஒரு படைப்பு Apache RTR 200 4v. வளர்ந்துவரும் பைக் நிறுவனகளுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு டிவிஎஸ் நிறுவனம் புதிய வடிவமைப்புகளை வெளியிட்டு வருகிறது. Apache இந்த பைக் டிவிஎஸ் நிறுவனத்தில் அதிகம் விற்பனையாகும் ஒரு பைக். இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பைக் . 200cc திறன்கொண்ட இந்த பைக் 5 டிரான்ஸ்மிஷனை கொண்டுள்ளது.12 வினாடிகளில் 100km வேகத்தை தொடும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மைலேஜ் 35km முதல் 40km வரை கொடுக்கிறதென பயனாளர்கள் கூறுகின்றனர்
#Yamaha R15
அந்தகாலகட்டத்தில்லும் இந்த காலகட்டத்திலும் அனைவராலும் கவர்ப்பட்ட பைக்கில் யமஹா RX100 ஒன்று. இதை யாராலும் மறுக்கமுடியாது. தற்போது யமஹா R15 இளைஞர்கள் இடையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பைக் பார்த்த உடன் கவரும் வகையில் இருக்கும். இது 150CC திறன் கொண்ட சிங்கில் சிலிண்டர் என்ஜின். இதன் மொத்த எடை 139Kg. மணிக்கு 140km வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் மைலேஜ் 40km முதல் 45km வரை கொடுப்பதாக சொல்லப்படுகிறது. இதன் வடிவமைப்புக்கே இளைஞர்கள் அடிமையாக உள்ளனர்.