ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்துள்ளது.
2001ஆம் ஆண்டு நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதல், 2008ஆம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் ஜெய்ஷ் இ முகமது ஈடுபட்டது. அண்மையில் நடைபெற்ற புல்வாமா தாக்குதல் பின்னணியில் ஜெய்ஷ் இ முகமது இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டிவருகிறது. இந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என ஐ.நா. சபையிடம் இந்தியா கோரி வந்தது. மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்குமாறு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. ஆனால், சீனா மட்டும் மசூத் அசாரை பயங்கரவாதியாக அறிவிக்க முட்டுக் கட்டையாக இருந்து வந்தது. இந்தநிலையில், சீனா தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதை அடுத்து, மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்துள்ளது.