தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே குமரெட்டியாபுரம் பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
குமரெட்டியாபுரத்தில் 400 ஆண்டுகள் பழமையான பாலசுப்ரமணியசுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி சுவாமிக்கு தினமும் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பான வகையில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் பாலசுப்ரமணிய சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நான்குமாட வீதிகளில் வலம் வந்த தேரை பக்தர்கள், அரோஹரா முழக்கங்களுடன் வடம் பிடித்து இழுத்தனர்.