6-வது முறை தங்கம் வென்று சாதனை படைத்த மேரி கோமுக்கு, குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து

உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் 6-வது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்த மேரி கோமுக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்திய பெண்களுக்கு மேரி கோம் முன்மாதிரியாக விளங்குவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய விளையாட்டு துறைகளுக்கு இது ஒரு பெருமைமிக்க தருணம் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில், தெரிவித்துள்ளார்.

மேரி கோமின் வெற்றி தனித்துவம் வாய்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ள அவர், தங்கம் வென்ற மேரி கோமுக்கு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன்சிங் ரதோர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version