சீனாவின் தற்காப்பு கலையான வூ சூ விளையாட்டை ஒலிம்பிக்கில் விளையாட சர்வதேச ஒலிம்பிக் கமிட்டு அனுமதி அளித்துள்ளது
2022 டாக்கர் ஒலிம்பிக் போட்டியில் சீனாவின் தற்காப்பு கலையான வூ சூ இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வூ சூவை ஒலிம்பிக்கில் கொண்டு வர வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த சீனா, 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியிலும் 2014 நன்சிங் சர்வதேச இளையோர் ஒலிம்பிக் போட்டியிலும் அதனை சிறப்பு விளையாட்டாக அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் வூ சூ விளையாட்டை ஒலிம்பிக்கில் கொண்டுவர சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அனுமதி அளித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஸ்நேகல் நாட்டின் டாக்கல் நகரில் நடைபெறும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் வூ சூ விளையாட்டு கொண்டுவரப்படுகிறது