சிதம்பரம் : ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றதால் சர்ச்சை

சிதம்பரம் நடராஜர் கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் விதிகளை மீறி நடைபெற்ற திருமணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் வழக்கமாக வடக்குக் கோபுரம் அருகில் உள்ள பாண்டியநாதர் சந்நிதியில் தான் திருமணம் நடத்தப்பட்டு வருகிறது. ஆயிரங்கால் மண்டபத்தின் ராஜசபை புனிதமான இடம் என்பதால் அங்கு ஆன்மிக நிகழ்ச்சி, பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெற்று வந்தன. முதன் முறையாக சிவகாசி பட்டாசு தொழிலதிபரின் இல்லத் திருமண விழா விதிமுறைகளை மீறி ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. சிறிய கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றதால் அதற்கான நாட்டிய நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் தவிர்க்க முடியாத காரணத்தால் திருமணம் நடத்தப்பட்டது எனக் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இது போன்று நடைபெறாது எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version