ஒரிஜினல் உலக நாயகன் மார்க் சுக்கர்பெர்க்

மார்க் சுக்கர்பெர்க்.

பேர் கொஞ்சம் குழப்பமாதான் இருக்கும். முழுப்பெயர் மார்க் எலியட் சுக்கர்பெர்க். அமெரிக்க தொழிலதிபர். இலக்கிய ஆர்வலர். சமூகசேவகர். ஏதோ ஒன்றை மறந்துவிட்டேனோ?

ஆம். உலகமுழுமைக்கும் இந்த ஒரு வார்த்தை தெரியும் என்றால் அப்படிப்பட்ட வார்த்தைகளுள் ஒன்று ஃபேஸ்புக். 2004 ம் அண்டு ஃபிப்ரவரி 4ம் நாள் பிறந்த இந்த ஃபேஸ்புக் இன்று உலகத்தின் மிக முக்கியமான சமூகத்தளம்.

ஃபேஸ்புக் பிறந்தது வேண்டுமானால் 2004 ஆக இருக்கலாம். ஃபேஸ்புக் பிறக்கக் காரணமாயிருந்தவர் பிறந்தது இன்றுதான்.

அதாவது மே 14, 1984. நியூயார்க் நகரின் ஒயிட் பிளைன்சில் ஒரு பிறந்தது, டாப்ஸ் பெர்ரியில் வளர்ந்து இன்று உலகம் முழுதையும் ஆளுகிற தனிநாயகமாக விளங்கும் மார்க் சுக்கர்பெர்க் தான் அது.

சிறிய பகிர்வுத் தளமாக ஆரம்பித்து , மெல்ல பள்ளிகளின் பக்கம் நகர்ந்த இந்த ஃபேஸ்புக் தளம் மெல்ல மற்றவர்கள் பதிவிடுவதை பார்க்கும் வசதியை 2005 ல் ஏற்படுத்தியது. அதாவது நியூஸ் ஃபீடு. ஆரம்பத்தில் பலராலும் எதிர்க்கப்பட்டாலும் இன்று எவராலும் தவிர்க்கமுடியாத சமூக ஊடகமாக திகழ்ந்துவருகிறது.

குழந்தையாக இருந்ததிலிருந்தே நிரலாக்கத்தில் (Programming) அதீத ஆர்வம் கொண்டிருந்தார். இசை, இலக்கியம், விளையாட்டு, நாடக நடிப்பு என பலதுறை வித்தக்ராகத்தான் இரிந்திருக்கிறார் நம்ம மார்க்.

அவரது தந்தையின் அலுவலகத்தில் பணியாளர்களைத் தொடர்பு கொள்வதற்கு உதவியாக ஒரு நிரலையும் முதலில் உருவாக்கினார்; அவர் ரிஸ்க் என்ற விளையாட்டின் பதிப்பையும் உருவாக்கினார். மேலும் சினாப்சிஸ் என்ற இசை இயக்கியையும் உருவாக்கினார். பயனர்களின் கேட்கும் பழக்கங்களைக் கற்பதற்கு செயற்கை நுண்ணறிவில் இது பயன்படுத்தப்பட்டது. மைக்ரோசாஃப்ட் மற்றும் AOL ஆகிய நிறுவனங்கள் சினாப்சிஸை வாங்கி சுக்கர்பெர்க்கை பணியமர்த்த முயற்சித்தது. ஆனால் அவர் அதற்குப் பதிலாக ஹார்வெர்டு பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு முடிவெடுத்தார். அங்கு அவர் ஆல்ஃபா எப்சிலிலோன் பீ என்ற அதன் துணைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். கல்லூரியில் த இல்லியாட் போன்ற வீரகாவியங்களில் இருந்து வசனங்களை ஒப்புவிப்பதற்காக பெரிதும் அறியப்பட்டார்.

சுட்டிக்குழந்தையாக எல்லோரையும் எப்போதும் இயக்கத்திலேயே (Engaging)வைத்திருந்த மார்க் , தான் வளர்ந்தபின்பும் ஃபேஸ்புக் வழியே எல்லோரையும் இயக்கத்திலேயே வைத்திருக்கிறார் என்பதும் இவரது தனிச்சிறப்பு. இன்றோடு 35 வயதை எட்டியிருக்கும் மார்க்குக்கு மனதார வாழ்த்துகளை தெரிவிக்கிறது நியூஸ்ஜெ குழுமம்.

உலகநாயகன் என்ற பட்டம் சரியாகப் பொருந்துவது என்றால் அது மார்க் சுக்கர்பெர்க் என்ற ஒருவருக்குத்தான். ஹேப்பி பர்த்டே ஒரிஜினல் உலக நாயகனே.

 

Exit mobile version