உலக பணக்காரர் பட்டியலில் மார்க் சக்கர்பர்க் பின்னடைவை சந்தித்துள்ளார்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பல்வேறு நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்வதை நிறுத்தியுள்ளதால், பேஸ்புக் நிறுவனம் 7.2 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளது.

கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு பேஸ்புக் பங்குகள் தற்போது சரிந்துள்ளது. புளூம்பர்க் இதழின் உலக பணக்காரர் பட்டியலில் மார்க் சக்கர்பர்க் பின்னடைவை சந்தித்துள்ளார். தற்போது அவரது மொத்த சொத்து மதிப்பு குறைந்து 82.3 பில்லியன் டாலராக உள்ளது. இதனால் மார்க் சக்கர்பெர்க் பணக்காரர் பட்டியலில் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு 8.3 சதவீதம் சரிவை சந்தித்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக கோககோலா நிறுவனம், சமூக வலைத்தள விளம்பரங்களை 30 நாட்களுக்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதேபோல வெரிசான் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், பேஸ்புக்கில் விளம்பரம் தருவதை நிறுத்தி வைத்துள்ளது. இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனத்தின் வருவாய் பின்னடைவை சந்தித்துள்ளது.

Exit mobile version