கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க பேஸ்புக் நிறுவனம் 20 மில்லியன் டாலர்கள் நன்கொடை வழங்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் அதை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. உலகின் பல்வேறு தனியார் நிறுவனங்களும் தடுப்பு நடவடிக்கைகளையும், நிதி உதவிகளையும் அளித்து வருகிறது. அந்த வகையில் பேஸ்புக் நிறுவனம் கொரோனா தடுப்பிற்காக 20 மில்லியன் டாலர்களை நிதியாக அளித்துள்ளது.
இந்த அறிவிப்பை பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெக் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதில் கொரோனா தடுப்பிற்காக உலக சுகாதார அமைப்பிற்கு 10மில்லியன் டாலரும், CTC எனும் தொண்டு நிறுவனத்திற்கு 10 மில்லியன் டாலர் என மொத்தம் 20 மில்லியன் டாலர் நன்கொடை வழங்குவதாக அந்த அறிவிப்பில் கூறியிருந்தார். ஏற்கனவே மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் கொரோனா பாதிப்பை தடுக்க நிதி வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது..