மெரினா கடற்கரையை தூய்மையாக பராமரிக்கும் வகையில் திட்டம் வகுத்து அதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வரும் டிசம்பர் 17ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆழ்கடலில் மீன்பிடிக்க மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற புதிய விதிமுறையை எதிர்த்து மீனவர்கள் நல அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கினை நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினா கடற்கரை பராமரிப்பு குறித்து சென்னை மாநகராட்சிக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதுவரை எத்தனை மீனவர்கள் கடை அமைக்க மாற்று இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் மாற்று இடம் வழங்க வேண்டியவர்களின் விவரங்கள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் மெரினா கடற்கரையை தூய்மையாக பராமரிக்கும் வகையில் திட்டம் வகுத்து அதற்கான அறிக்கையை டிசம்பர் 17ஆம் தேதி தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு அவகாசம் வழங்கியும் உத்தரவிட்டனர்.