சென்னையில், தேசிய இளைஞர் தினத்தையொட்டி மரத்தான் போட்டி நடைபெற்றது. விவேகானந்தர் பிறந்தநாள் தேசிய இளைஞர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும் வகையில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், மரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
சிறுவர்கள், பெண்கள் உள்பட ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஆண்களுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும், பெண்களுக்கு 3 கிலோ மீட்டர் தூரமும் போட்டிகள் நடைபெற்றன. மாரத்தான் போட்டியில் பங்கேற்றது மிகுந்த புத்துணர்ச்சி அளிப்பதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.