பெரம்பலூரில் தேசிய இளைஞர் எழுச்சி தினத்தையொட்டி நடைப்பெற்ற மாரத்தான் போட்டியில் 500க்கு மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இளைஞர் எழுச்சி தினத்தையொட்டி, பிட் இந்தியா திட்டத்தின் கீழ் பெரம்பலூரில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு துவங்கிய இந்த போட்டியினை, காவல்துறை துணை கண்காணிப்பாளர் கென்னடி கொடியசைத்து துவங்கி வைத்தார்.
வயது வித்தியாசம் அடிப்படையில், 3 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் 7 கிலோ மீட்டர் என்று 3 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கத் தொகை, பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, தேசிய இளைஞர் எழுச்சி தினத்தையொட்டி சுவாமி விவேகானந்தர் உருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து பிட் இந்தியாவின் நோக்கமான உடல்வளத்தையும், சுகாதாரத்தையும் பேணி காப்போம் என உறுதி மொழி எடுக்கப்பட்டது.