ஜார்க்கண்ட் மாநிலம் சாராய்காலா மாவட்டத்தில், காவல்துறையினரின் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகினர்
ஜார்கண்ட் மேற்குவங்க எல்லையில் அமைந்துள்ள சாராய்காலா மாவட்டத்தின் திருல்திக் பகுதியில் வாரச்சந்தை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதையடுத்து அப்பகுதியில் நகர காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் காவல்துறையினர் 5 பேர் உயிரிழந்தனர். அத்துடன் காவல்துறையினரிடமிருந்த ஆயுதங்களையும் மாவோயிஸ்டுகள் பறித்துச் சென்றனர். இந்தத் கொடூரத் தாக்குதலுக்கு ஜார்கண்ட் முதலமைச்சர் ரகுபர்தாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் கூடுதல் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் இராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.