மாவோயிஸ்ட் டேனிஸ் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்

சிறையில் இருக்கும் மாவோயிஸ்ட் டேனிஸ், இன்று உதகை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பட்ட நிலையில், வழக்கு பிப்ரவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 2016ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே அரசுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியது தொடர்பாக மாவோயிஸ்ட் டேனிஸ் கொலகொம்பை   சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் டேனிஸ் உதகை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி வடமலை, வழக்கினை பிப்ரவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனிடையே, நீதிமன்ற வளாகத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மாவோயிஸ்ட் டேனிஸ் கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version