90களில் தமிழ்நாட்டின் பல இளம்பெண்களின் மனம் கவர்ந்த நாயகன் ’’அரவிந்த்சாமி’’

1967 ம் ஆண்டு ஜூன் மாதம் 18 ம் தேதி சென்னையில் பிறந்தவர் அரவிந்த் சாமி. 90களின் காலகட்டத்தில் பெண் பார்க்கச் சென்ற மாப்பிள்ளைகள் அரவிந்த் சாமியால் பெரும் துயரத்திற்கு ஆளாகினர். மாப்பிள்ளை அரவிந்த் சாமியைப் போல இருக்க வேண்டும் என்பது அன்றைய ஒட்டுமொத்த இளம்பெண்களின் கனவாகவே இருந்தது. இயக்குநர் மணிரத்னத்தின் தளபதி படம் மூலம் 1991ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த் சாமி, அறிமுகமான படத்திலேயே ரஜினி மற்றும் மம்முட்டி போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்தவர். அதில் கலெக்டராக வரும் அவரது காட்சியில் அறிமுக நடிகர் என்ற தோற்றமே தெரியாது. அதற்கு அடுத்த ஆண்டில் மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் ஹீரோவாக மாறிய அரவிந்த் சுவாமி, இளம்பெண்களின் கனவு நாயகனாக மாறினார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த படத்தில் இடம் பெற்ற அந்த காதல் காட்சியில் நான் ஒன்னும் ரொம்ப மோசமானவன் இல்லை. கொஞ்சம் நல்லவந்தான் என்ற காட்சியும், படத்தின் இறுதியில் நாட்டு பற்றையும் தன் மனைவி மீது உள்ள காதலையும் சொல்லும் காட்சியும் இப்போதும் காதல் பூக்கும்.

அதன் பிறகு தமிழ் சினிமாவின் ஆணழகனாக கொண்டாடப்பட்டார் அரவிந்த்சாமி, 1995ல் மணிரத்னம் இயக்கத்தில் பம்பாய் திரைப்படத்தில் நடித்தார். காதல் மனம் சார்ந்தது…மதம் சார்ந்தது அல்ல என்பதை சொன்ன பம்பாய் திரைப்படம் விமர்சனங்களை சந்தித்தாலும் செம ஹிட் படமாக அமைந்தது..

அதன் பிறகு வெளியான இந்திரா, மின்சாரக் கனவு மற்றும் என் சுவாசக் காற்றே போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்திக்கொண்டார் அரவிந்த் சாமி. 2000 ம் ஆண்டு மாதவன் அறிமுகமான அலைபாயுதே திரைப்படத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக எதார்த்தமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். 2015 ல் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் திரைப்படத்தில் சித்தார்த் அபிமன்யுவாக நடித்தார். வழக்கமாக சினிமா வில்லன்களை காட்டிலும் சித்தார்த் அபிமன்யு பாத்திரம் வேறுபட்ட வில்லனாக நடித்து அசத்தியிருப்பார் அரவிந்த்சாமி. அதன் பிறகு வெளியான போகன் திரைப்படம் சுமாரான வெற்றியை கொடுத்தாலும் ஆதித்யாவாக நம்மை மிரட்டியிருப்பார் அரவிந்த்சாமி.செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தில் பதற்றமும் பரபரப்பும் முகமாக கொண்ட வரதனாக அசத்தியிருப்பார் அரவிந்த்சாமி. உனக்கு யாராவது பழைய frirnd இருக்கானா நம்பாதே இந்த வசனம் நட்பின் துரோகத்தை சொல்லும் விதமாக இருக்கும்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை சினிமாவாக்கப்பட்டு வருகிறது. இதை இயக்குனர் விஜய், தலைவி என்ற பெயரில் இயக்கி வருகிறார் ஜெயலலிதாவாக இந்தி நடிகை கங்கனா ரனவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆராக நடிகர் அரவிந்த் சாமி நடித்துள்ளார்.

நடிகனாக எவ்வளவு பெயர்களை சம்பாதித்தாரோ அதேபோல தொழிலும் சம்பாதித்துள்ளார் என்றே சொல்லலாம். ப்ரோ ரிலீஸ் என்ற நிறுவனத்தில் இயக்குனராகவும், இன்டெர்ப்ரோ என்ற நிறுவனத்தில் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். பின்னர் தாமே சொந்தமாக டேலண்ட் மக்சிமஸ் என்ற கன்சல்டன்சி நிறுவனத்தை நிறுவினார். இவருக்கு கீழ் 5000 பேர் வேலை பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. இவை எல்லாவற்றையும் கடந்து வெள்ளை மழை பாடல் ஒளிக்கும் போது இப்போதும் பெண்களின் மனதில் ஆணழகன் அரவிந்த்சாமி தான் என்பதை மறுக்கமுடியாது.

Exit mobile version