அதிமுக கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும்

சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்த முதலமைச்சர் பழனிசாமி, 43 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார். பொதுமக்கள் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணி 40 இடங்களிலும் வெற்றிபெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும் என்று கூறினார்.

Exit mobile version