மூங்கில் கூடை தொழிலை காப்பாற்ற உற்பத்தியாளர்கள் வேண்டுகோள்

இயற்கை சாராம்சம் கெடாமல் தயாரிக்கப்படும் மூங்கில் கூடைகளுக்கு என்று எப்பொழுதும் ஒரு தனி மரியாதை உண்டு. தற்போது நலிவடையும் நிலையில் இருக்கும் இந்த தொழிலை காப்பாற்ற வேண்டும் என மூங்கில் கூடை உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எளிதாக கையாளக்கூடிய வகையிலான மூங்கில் கூடைகள் திண்டுக்கல்லில் விதவிதமாக தயாரிக்கப்பட்டு பிறமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தக்காளி வைப்பதற்கான கூடை, முகூர்த்த கூடை, தேங்காய் பழத்தட்டு, மில்களில் பஞ்சுகள் அள்ளுவதற்கான கூடை, கோழி குஞ்சுகளை அடைத்து வைப்பதற்கான கூடை என்று பல்வேறு விதங்களில் மூங்கில் கூடைகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றின் விலையும் மற்ற வகை தயாரிப்புகளை ஒப்பிடுகையில் பெரிய அளவிற்கு விலை அதிகம் கிடையாது. இந்த நிலையில், பிளாஸ்டிக் கூடைகள், பிளாஸ்டர் வகை பாத்திரங்களின் வரவால் தங்கள் வாழ்வாதராம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அழியும் நிலையில் இருக்கும் இந்த தொழிலை காப்பாற்றிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மூங்கில் கூடை உற்பத்தியாளர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Exit mobile version