இன்றைய இளைஞர்கள் அராஜக போக்கை விரும்புவதில்லை என மன் கி பாத் நிகழ்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்
இன்று நடைபெற்ற 2019ம் ஆண்டின் இறுதி மன் கி பாத் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவை நவீன மயமாக்குவதில் இளைஞர்கள் மிகப்பெரிய அளவில் பங்களிப்பதாக தெரிவித்தார். மேலும், இன்றைய இளைஞர்கள் அராஜகப் போக்கை விரும்புவதில்லை என்றும், குடும்ப அரசியல், சாதி அரசியல், வேண்டியவர்-வேண்டாதவர் போன்ற பாகுபாடுகளை வெறுப்பதாகவும் அவர் பேசினார். முன்னாள் மாணவர்கள் இணைந்து தாங்கள் பயின்ற கல்வி நிலையங்களில் நூலகம் ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேலும், நம் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்கி, உள்ளூர் பொருட்களின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.