காரைக்காலில் விமரிசையாக நடைபெற்ற மாங்கனி திருவிழா

காரைக்காலில் பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளானோர் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

முக்கனிகளில் முதற்கனியான மாங்கனிக்கு முக்கியத்துவம் அளித்து நடத்தப்படும் மாங்கனித் திருவிழா கடந்த 13ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பரமதத்தருக்கும், காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சி நாளான இன்று சிவபெருமான் பிச்சாண்ட மூர்த்தியாக எழுந்தருளி பவழக்கால் விமானத்தில் பத்மாசனம் கோலத்தில் அருள் பாலித்தார். அப்போது, பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மாங்கனிகளை எரிந்து சிவபெருமானை வழிபட்டனர். வீசியெறியும் மாம்பழங்களை பிடித்து உண்டால் குழந்தைப்பேறு உண்டாகும் என்ற நம்பிக்கை உள்ளதால் கூடியிருந்த பக்தர்கள் மாங்கனிகளை தாவிப் பிடித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Exit mobile version