மணிமுத்தாறு அணையிலிருந்து பாசனத்திற்காக, இன்று முதல் தண்ணீர் திறந்துவிடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள பெருங்கால் பாசனம் மூலம் பருவ சாகுபடிக்காக இன்று முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்படும் என்று தெரிவித்துள்ளார். அடுத்த 140 நாட்களில் 384 புள்ளி5 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பு வைக்கவும், தேவைக்கேற்ப தண்ணீரை திறந்து விடவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் சுமார் இரண்டாயிரத்து 756 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.