நீலகிரியில் மங்குஸ்தான் பழ சீசன் தொடக்கம்

நீலகிரியில் பழங்களின் ராணி என அழைக்கப்படக் கூடிய மங்குஸ்தான் பழத்தின் சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். 

குன்னூர் அருகேயுள்ள பரலியாறு பகுதியில் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் அரிய வகையான மங்குஸ்தான் பழ சீசன் தொடங்கியுள்ளது. இந்த மங்குஸ்தான் பழங்களைப் பரலியாறு மற்றும் குன்னூர் சாலையோரப் பழக்கடைகளில் விற்பனைக்காக வைத்துள்ளனர். இந்த மங்குஸ்தான் பழமானது உடலில் உள்ள நச்சுத் தன்மையை முறிக்கும் தன்மை கொண்டது. எந்த ஒரு பழத்திலும் இல்லாத ஒரு வகையான இனிப்பும், புளிப்பும் கலந்து சுவையாக இருக்கும் இப்பழத்தைச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். தரத்திற்கு ஏற்ப ஒரு கிலோ 320 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரையிலும் விற்பனையாவதால் விற்பனையாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Exit mobile version