முழு ஊரடங்கு காரணமாக ஒட்டன்சத்திரத்தில் விளையும் மாம்பழங்கள் விற்பனை செய்ய முடியாமல் மரத்திலேயே அழுகி வீணாவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செந்தூரம், பங்கனபள்ளி, கல்லாமை போன்ற பல வகையான மாம்பழங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
இங்கு விளையும் மாம்பழங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.
ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதால், மாம்பழங்களை விற்பனை செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
இதனால் மாம்பழங்கள் பறிக்காமல் மரத்திலேயே அழுகி வீணாவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்