திண்டுக்கல்லில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் மாம்பழங்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
திண்டுக்கல் அருகே நத்தம் செங்குறிச்சி, வேம்பார்பட்டி, சாணார் பட்டி, கோபால்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மாம்பழம் சாகுபடி செய்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், மாம்பழ சாகுபடி கடும் பாதிப்படைந்தது. இந்நிலையில், இந்தாண்டு மாம்பழ வகையின் முதல் தரமான செந்தூரம் வகை மாம்பழத்தின் வரத்து அதிகரித்துள்ளது. ஒரு கிலோ மாம்பழம், தரத்துக்கேற்ப 30 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பழக்கடையில், அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் கண்ணைக் கவரும் வண்ணமையமான மாம்பழங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிசெல்கின்றனர்.