மங்கையரும் மரங்களும் -2 மகளிர் மாத சிறப்புத் தொடர்

வள்ளியை, பேசுவதற்காக தனியே அழைத்துப்போகிறான். அங்கு ஏதும் பேசாமல் ஒரு மரத்தடியில் நிற்கவைக்கிறான். அந்த மரத்தின்  பட்டைகளைத் தொட்டுப்பார்க்கிறாள். மெல்ல மரத்தை வருடுகிறாள். எறும்புகள் ஊறுவதை கவனித்தபடி மரத்தைப் பார்த்தால் அதில் மலர்கள் ஏதும் இல்லை. மணமும் இல்லை. பட்டைகளும் மணமற்றிருக்கின்றன.

முருகனைப் பார்த்து  ஏதோ பேச வேண்டும் என்றாயே ? என்றாள்.

இல்லை கிளம்பலாம் என்றான். இருவரும் கிளம்பினார்கள் .

அடுத்தநாளும் அதேபோல அழைத்தான். அவள் வரவில்லை. வரமறுத்த வள்ளியை ஒருவழியாக ஒப்புக்கொள்ள வைத்து அழைத்துப்போனான். அதே இடத்தில் அதே மரத்தைப் பார்த்த வள்ளிக்கு ஒரே ஆச்சர்யம்.

இன்று எப்படி இதில் இவ்வளவு மலர்கள்?என்று ஆச்சர்யமாய்க் கேட்டவளுக்கு பாரி சொன்ன பதில்,

”நேற்று நீ இதற்கு அணுக்கமயிருந்தாய், அதன்பொருட்டு இன்று இந்த மரம் பூத்துள்ளது” என்று முருகன் சொல்ல , தன்னால் மலர்ந்த மலர்கள் இவை என்கிற நினைப்பில் சொக்கி காதலில் விழுந்தாள் வள்ளி என்றொரு சுவாரஸ்யமான காட்சி வேள்பாரி நாவலில் வரும்.

கம்பராமாயணத்தில் யானைகள் இந்த மரங்களை பொடித்து விளையாடியதாகவும் குறிப்புகள் கணப்படுகின்றன.

 

பூத்த ஏழிலைப் பாலையைப்

  பொடிப் பொடி ஆக.

காத்திரங்களால். தலத்தொடும்

  தேய்த்தது – ஓர் களிறு.                       – (கம், ராமாய ), சந்திரசைலப் படலம் ( 6 )

 

 

மத யானைகளால் மட்டுமே அசைக்க முடிந்த அந்த மரம்தான் பெண்களால் பூத்துக்குலுங்கும் இந்த மரம்.

இப்படியாக தமிழர் வாழ்வியல் மட்டுமன்றி சூழலியலும் பெண்களோடு இயைந்ததாகவே இருந்துள்ளது.

 

இவையெல்லாம் கதைகள் , பொய்கள் , புரட்டுகள் என எத்தனை விதமாக எத்தனை பேர் சொன்னாலும் பெண்களால் கட்டுப்படுத்த முடியாதவை ஏதுமில்லை என்னும் வழக்கத்தை உறுதி செய்யும் விதமாகத்தான் ,நீர் நிலம் முதலிய பஞ்ச பூதங்களும் பெண் சொல் கேட்டு பணியும் என்று காலங்காலமாக நமக்கு கதைகள் சொல்லப்பட்டு வந்தன.  

இப்படியாக ஒரு சமூகத்தின்  வாழ்வியல் மட்டுமன்றி சூழலியலும் பெண்களோடு இயைந்ததாகவே இருந்துள்ளது.  காரணம் பெண்கள் இயற்கைக்காக உயிர்விடவும் தயாராக இருந்ததும் உயிர் விட்டதும்தான்.

அடுத்த கட்டுரையில், அப்படி உயிர்விட்ட, மறக்கமுடியாத மரங்களின் காதலி.

 

மங்கையரும் மரங்களும் தொடருக்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவளிக்கவும்.

 

-தொடரும்

முந்தைய பகுதியை படிக்க 

மங்கையரும் மரங்களும் -1

Exit mobile version