திருப்பத்தூர் அருகே கோயில் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நரியங்குடி கிராமத்தில் ஆதினமிளகி அய்யனர், காட்டு கருப்பர் கோயில் உள்ளது. இக்கோயிலில், புரவி எடுப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, நடைபெற்ற மஞ்சுவிரட்டில், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் அதிகமான மாடுகள் பங்கேற்றன. நரியங்குடி, தவசேந்தல்பட்டி உள்ளிட்ட கிராமத்தினர் கலந்து கொண்ட இந்த மஞ்சுவிரட்டில் 3 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது என கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் மதகுபட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.