மேலூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட காளைகளும், எராளமான மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் மந்தைகருப்பணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு உச்சரிச்சான்பட்டியில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. முன்னதாக கிராமத்தினர் ஜவுளி பொட்டலங்களை சுமந்து வந்து ஒவ்வொரு காளைக்கும் மரியாதை செய்தனர். அதனை தொடர்ந்து ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை, இளைஞர்கள் உற்சாகம் அடக்கினர். வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Discussion about this post