இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்டு

டிஸ்கவரி தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியை நாட்டு மக்கள் பார்க்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டிஸ்கவரி தொலைக்காட்சியில் மேன் வெர்சஸ் வைல்டு என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் வளமான சுற்றுச்சூழல் பாரம்பரியம், சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் இயற்கையோடு இணக்கமாக வாழ்வதன் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து உலகத்திற்கு உணர்த்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளதாக தெரிவித்தார். இன்று இரவு 9 மணிக்கு நிகழ்ச்சியைப் பார்க்குமாறு பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Exit mobile version