சமூக ஊடகங்களில் போலி கணக்கு தொடங்கி, சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த நபரை நாமக்கல் போலீசார் கைது செய்துள்ளனர்.
இணையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்கும் வகையில், தமிழ்நாடு காவல்துறையினர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சென்னை கூடுவாஞ்சேரி பகுதியில் இருந்து சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்கள், சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்படுவதை சென்னை சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்தனர். ச
ம்பந்தப்பட்ட நபர், கடந்த 2 நாட்களாக நாமக்கல்லில் இருந்து வீடியோக்கள் பதிவேற்றம் செய்வது தெரியவந்தது. இதுகுறித்த நாமக்கல் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, மாரப்பம்பாளையத்தைச் சேர்ந்த குருசாமி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்த காவல்துறையினர், நாமக்கல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.