சென்னை கே.கே.நகரில் உள்ள ஐயப்பன் கோவிலில் மாலை அணிந்தவர் போல் நடித்து திருட்டில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காரப்பக்கம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில் அப்பாவி போல் நடித்து திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 6 ஆம் தேதி சென்னை கே.கே. நகர் ஐயப்பன் கோவிலில் சபரிமலைக்கு மாலை அணிந்தவர் போல் வேடமிட்டு அங்கு சென்ற செந்தில்குமார், பிரதீபா என்பவரின் செல்போன் மற்றும் கைப்பையை திருடியுள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர். அதில், செந்தில்குமார் திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. செல்போன் சிக்னலை வைத்து பின் தொடர்ந்த காவல்துறையினர் செந்தில்குமாரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.