திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்குவங்க முதலமைச்சருமான மமதா பானர்ஜி தனது அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ளார்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் மற்றும் 50 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சரவையில், நீர்பாசனத்துறை மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சராக சோமன் மகாபத்ராவும், பழங்குடியினத்துறை அமைச்சராக ராஜீப் பானர்ஜியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைப்போல மேலும் பல துறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தலில் பாஜக மேற்குவங்கத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றியதால், திரிணாமுல் காங்கிரசின் மாநில நிர்வாகிகள் மீது மமதா பானர்ஜி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.