மம்முட்டி, மோகன்லாலுக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா

மம்முட்டி, மோகன்லாலுக்கு, ஐக்கிய அரபு அமீரகம் ‘கோல்டன் விசா’ வழங்கி கவுரவித்துள்ளது.

அமீரகத்தில் வசிக்க விரும்பும் விளையாட்டு வீரர்கள், திரைபிரபலங்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், 10 ஆண்டுகள் வரை வசிக்கும் வகையில் கோல்டன் விசா நடைமுறையில் உள்ளது.

இந்த கோல்டன் விசா மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது.

அபுதாபி பொருளாதாரத்துறை தலைவர் முகம்மது அலி அல் சோரபா, இருவருக்கும் கோல்டன் விசாவை வழங்கினார்.

இதற்கு முன்பாக பாலிவுட் பிரபலங்கள் ஷாருக்கான், சஞ்சய்தத் ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version