மத்திய அரசின் திட்டங்கள், மக்களைச் சென்றடைய மம்தா பானர்ஜி தடையாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கூச் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், ராணுவ நடவடிக்கைக்கு மம்தா பானர்ஜி எதிராக இருப்பதாகவும், தாயகத்தை அவர் மதிக்க தவறி விட்டதாகவும் கூறினார். இந்தியாவை துண்டாடும் முயற்சிக்கு மம்தா துணை போவதாகவும் அவர் கடுமையாக சாடினார். மத்திய அரசின் திட்டங்கள் கொல்கத்தா மக்களை சென்றடைய மம்தா பானர்ஜி தடையாக உள்ளதாகவும், பாஜகவுக்கு ஆதரவு அலையால் மம்தாவின் தூக்கம் பறிபோய் விட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். சாரதா சிட்பண்ட் ஊழலுக்கு துணை போன மம்தாவையும், திரிணாமூல் காங்கிரசையும் தூக்கி எறிய மேற்கு வங்க மக்கள் தயாராகி விட்டதாக அவர் தெரிவித்தார்.