மத்திய பாஜக அரசுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கொல்கத்தாவில் நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
வரும் மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதன் ஒருபகுதியாக பா.ஜ.கவுக்கு எதிரான ஒத்தக்கருத்துடைய அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் மற்றும் பேரணிக்கு மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்று வரும் பிராமண்ட பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் தேவகவுடா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் ஸ்டாலின், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லாஹ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் சார்பில் மல்லிக்கார்ஜுனா கார்கே பங்கேற்றுள்ளார்.