தேர்தல் சீர்திருத்தங்களை பரிந்துரை வழங்க குழு : மம்தா பானர்ஜி

தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக பரிந்துரைகளை வழங்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேநீர் விருந்து அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடப்பதை தடுப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைகள் வழங்க எதிர்க்கட்சி தலைவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

இந்த குழுவில் கங்கிரஸ் கட்சியை சேர்ந்த அபிஷேக் மனு சிங்வி, சமாஜ்வாடியை சேர்ந்த அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் சதீஷ் மிஸ்ரா, ஆம் ஆத்மிகட்சியில் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இடம் பெற்று இருப்பதாகவும் தெரிவித்தார். தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்தும் இந்த குழு பரிந்துரைக்கும் என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.

Exit mobile version