பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, திரிணாமுல் எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேர் பா.ஜ.க.வில் ஐக்கியமாகி உள்ளனர். இந்த சூழலில் மத்திய அரசு விடுத்த அழைப்பு ஏற்றுக் கொண்டுள்ள மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க இருப்பதாக கூறினார்.