மம்தா பானர்ஜி பிரதமராவார் என்று மேற்குவங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு, நாட்டின் முதல் பெங்காலி பிரதமர் என்ற பெருமையை பெற வாய்ப்பிருப்பதாக அம்மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் கூயுள்ளார்.
முதல் பெங்காலி குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பிரணாப் முகர்ஜி பெற்று விட்டார் என்று கூறிய திலிப் கோஷ், இது பெங்காலி பிரதமரை தேர்வு செய்வதற்கான நேரம் என்று பேசியுள்ளார். மேற்குவங்கத்தில் மம்தாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர பாஜக போராடி வரும் நிலையில், மம்தா பானர்ஜி பிரதமராவார் என்று அம்மாநில பாஜக தலைவர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மம்தாவுக்கு பிரதமர் ஆசையை தூண்டி, மாநில கட்சிகளை தனித்தனியே நிற்க வைப்பதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை பலவீனப்படுத்தும் நோக்கில் அவர் இவ்வாறு கூறியிருக்கலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.