பிரதமர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் மம்தா பானர்ஜிக்கு உள்ளது

மம்தா பானர்ஜிக்கு பிரதமர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் இருப்பதாக, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், மக்களை தேர்தலில் பாஜகவை எதிர்க்க, 22 கட்சிகளை திரட்டி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தினர். இதில் கலந்துகொண்டது குறித்து பெங்களூருவில் பேசிய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, பாஜகவை எதிர்கொள்ள இடதுசாரிகளையும் பங்கேற்க வேண்டுகோள் விடுத்தது பெருந்தன்மையை காட்டுகிறது என்றார். தேசிய கட்சிகளை விட, மாநில கட்சிகளில் வலிமையான தலைவர்கள் இருப்பதாக குறிப்பிட்ட அவர், வரும் மக்களவை தேர்தலில் மாநில கட்சிகள் முக்கிய பங்காற்றும் என்று கூறினார். நாட்டை வழிநடத்துவதற்கான அனைத்து தகுதிகள் மம்தா பானர்ஜிக்கு இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version