உலகின் மிகச்சிறிய ஆண் குழந்தையொன்று ஜப்பானில் பிறந்து உயிர் 5 மாதம் வரை உயிர்பிழைத்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த குழந்தை பிறக்கும் போது சுமார் கால் கிலோ அதாவது 268 கிராம் எடையுடன் பிறந்துள்ளது.
5 மாதங்களுக்கு முன்பு பிறந்த இந்த குழந்தையை காப்பாற்ற மருத்துவர்கள் போராடினர். தொடர்ந்து பல மாதங்களாக அவசர சிகிச்சைப் பிரிவிலேயே பராமரிக்கப்பட்டு வந்ததுடன் தற்போது சாதாரணமாக பராமரிக்கக்கூடிய அளவுக்கு தேறியுள்ளதாக தெரிவிக்கிறார்கள் மருத்துவர்கள்.
தற்போது 5 மாதத்திற்கு பிறகு 3.2 கிலோ எடையுடன் உள்ள அந்த குழந்தைக்கு உணவும் ஊட்டப்படுகிறது.
உலகில் முதன்முறையாக மிகச் சிறிய எடையில் பிறந்து உயிர் பிழைத்த ஆண் குழந்தையாக இதுவாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.