பதவியை ராஜினாமா செய்த மலேசிய பிரதமர்

மலேசியாவில் நிலவி வரும் அரசியல் நெருக்கடிகளால் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக மகாதீர் முகமது அறிவித்துள்ளார்.

மலேசியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மகாதீர் முகமது பிரதமராக பொறுப்பேற்றார். இதையடுத்து, கடந்த சில மாதங்களாக மலேசியாவில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. மகாதீருக்கு எதிராக அந்நாட்டு பொருளாதாரத்துறை அமைச்சர் அஸ்மின் அலி தலைமையில் அதிருப்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், 95 வயதான மகாதீர் முகமது தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மலேசிய மன்னரை சந்தித்து, அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். கடந்த 2003 ஆம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற மகாதீர் 2018 ஆம் ஆண்டு மீண்டும் பிரதமரானது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version