அரிவாள் தயாரிப்பில் பிரசித்தி பெற்று விளங்கும் மணப்பள்ளி

விவசாயத்துக்கு முக்கிய பங்காற்றும் அரிவாள் உற்பத்தியில் மோகனூர் அடுத்துள்ள மணப்பள்ளி பிரசித்தி பெற்று விளங்கி வருகிறது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்காரணமாக, அப்பகுதியில் விவசாயம் சார்ந்து பல்வேறு தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மோகனூர் மணப்பள்ளியில் தயாரிக்கப்படும் அரிவாள் பிரசித்தி பெற்றவை.

கரணை அரிவாள், வாழை அரிவாள், கதிர் அரிவாள் என பல்வேறு வடிவங்களில் இங்கு அரிவாள் தயார் செய்யப்படுகின்றன. விவசாயத்திற்கான அரிவாள் மட்டுமல்லாது , இறைச்சி வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் அரிவாள், கோயில்களில் வேண்டுதலுக்காக வைக்கப்படும் அரிவாள், வேல் போன்றவையும் இங்கு தயாரிக்கப்படுகிறது.

இத்தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர்.

Exit mobile version