உயிர் காக்கும் மருந்துகள் இந்தியாவில் போதுமான அளவில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு இந்தியா வழங்க வேண்டும் என்றும், காலம் தாழ்த்தினால் தக்க பதிலடி கிடைக்கும் எனவும் அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் தொனியில் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து மனித நேயத்தின் அடிப்படையில் பிற நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்துக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், பதிலடி தருவது நட்பு இல்லை என்றும், இந்தியா பிற நாடுகளுக்கு உதவ வேண்டும் எனவும், அதே நேரத்தில் முதலில் போதுமான மருந்துகள் இந்தியர்களுக்கு அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.