"60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்குவதை உறுதி செய்யவும்"-அதிமுக எம்.பி தம்பிதுரை

திருச்சி – கரூர்- கோயம்புத்தூர் இடையே எட்டு வழிச்சாலை அமைக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அண்ணா திமுக எம்பி தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார். 

மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், கொரோனா தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் மற்றும் வேளாண் துறைகளை மீட்டெடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 14 துறைகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு குறித்து பட்ஜெட்டில் இடம்பெறாதது வருத்தமளிப்பதாகவும், சம்பளம் பெறும் ஊழியர்களின் நலன் கருதி, வரி விலக்கு உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்றும் தம்பிதுரை கோரிக்கை விடுத்தார்.

திருச்சி- கரூர்-கோவை இடையே 8 வழிச்சாலை அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.தொடர்ந்து பேசிய அதிமுக எம்பி தம்பிதுரை, ஜோலார்பேட்டை-பர்கூர்-ஒசூர்-பெங்களூருவை இணைக்கும் வகையில் ரயில் பாதை அமைக்க வேண்டும் என்றும்,

தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு பாதுகாப்பு தளவாடங்களை கொண்டு செல்ல இந்த திட்டம் உதவும் என்றும் தெரிவித்தார். மேலும், ஒசூர் விமான நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் தம்பிதுரை கூறினார்.

 

Exit mobile version