வளிமண்டல மேலடுக்கில் தேங்கி கிடக்கும் குப்பைகளை மறு சுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்தும் விதமான புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தி, உலக நாடுகளை ஈர்த்த காரைக்கால் மாவட்ட இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்தவர் கிஷோர். இவர் பெங்களூரில் உள்ள கல்லூரியில் Aeronautical Engineering படித்து வருகிறார். தனது கண்டு பிடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் அவர், வளிமண்டல மேலடுக்கில் தேங்கி கிடக்கும் குப்பைகளை மறு சுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்தும் விதமான புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார். Space Trash Accumulator And Resender என்ற இவருடைய இந்த கண்டுபிடிப்பு உலக நாடுகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்த கண்டுபிடிப்பை ஆதரித்து மாணவர் கிஷோருக்கு அழைப்பு விடுத்துள்ளன. உலக நாடுகளின் பார்வையை ஈர்த்துள்ள கிஷோருக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.