மாகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்ததை அடுத்து அம்மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட குடியரசு தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்த நிலையில், கடந்த 12-ந் தேதி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த மாநிலத்தில் பாரதீய ஜனதாவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றது. சரத்பவாரின் தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த அஜித்பவார் துணை முதலமைச்சராக பதவி ஏற்றார். இதைத்தொடர்ந்து, மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.