அம்மா பேரவையின் ஆலோசனைக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

அதிமுக அம்மா பேரவையின் சார்பில் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

அம்மா பேரவையின் மாநில செயலாளர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துக்கொண்டு அம்மா பேரவை நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசணைகளை வழங்கினர்.

மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் விழா இளைஞர் எழுச்சி நாளாக கடைபிடிக்கப்படும் என்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும், அன்னதானம், கண் தானம், ரத்த தானம், உடல் உறுப்பு தானம் போன்ற தான தர்ம நிகழ்ச்சிகள் செய்யப்படும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இதில் இயற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

Exit mobile version